தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கிங்ஸ்லி தனுசியா (வயது – 29) என்ற இளம் குடும்பப்பெண் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த குறித்த பெண் , குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 24 ஆம் திகதி தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது .

இதையடுத்து அவர் எரிகாயங்களுக்கு உள் ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .

இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் நேற்றுக் காலை அவர் உயிரிழந்தார்.

மேலும் இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Von Admin