வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார்.

இன்று (29) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நோயாளர் காவுவண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் வயது 68 என்ற முதியவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Von Admin