விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.

விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில்.

மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின் பேரழகு அது.

அத்தகைய பெருமைக்கு முக்கியக் காரணம் காவிரி உருவாக்கிய வளமை தான். கண்ணை விரிய வைக்கும் காவிரியின் கலைப்பெருக்கத்தில் முதன்மையானதும், மனித உழைப்பின் மகத்தானதுமே தஞ்சை பெரிய கோவில்.

Von Admin