யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அவற்றை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

Von Admin