கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையே அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ம் திகதி மேசையில் வைக்கப்பட்டிருந்த அம்மி குழவி காலில் விழுந்துள்ளது.

இதனால் 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டதுடன் சடலம் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.