தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன.

இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு குறித்த விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் வெளியிட உள்ளன.