உத்தரகாண்ட் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பேருந்து கவிழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் உள்ள பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வெளி ஊரில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து சிம்ரி என்ற பகுதியில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், போலீஸார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin