• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்பிரிக்காவில் 66 குழந்தைகள் ஒரே நேரத்தில் பரிதாப பலி!

Okt 6, 2022

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில்  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார கூறியுள்ளது.

காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.

   இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அந்த மருந்துகள்   குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed