• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு

Okt 6, 2022

தாய்லாந்து, நாங் புவா லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் (06.10.2022) பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. 

இதில், 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் மதிய உணவு நேரத்தில் வந்தபோது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்துள்ளனர். 

பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். 

அந்த நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதும் போதைப் பொருள் விவகாரத்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் என்றும் விசரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தினார். 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி தனது மனைவி, குழந்தையை சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed