யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கைச் சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அம்பனை பிரதேசத்தில் உள்ள தனது தோட்டத்தில் தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றபோதே அவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதேசங்களில் வியாழக்கிழமை காலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.