• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Okt 8, 2022

பிரித்தானிய பள்ளி ஒன்றிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மாணவமாணவியரில் ஒரு பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பிரித்தானியாவின் Hull என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவமாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் பிரான்சிலுள்ள Limoges என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

மாணவமாணவிகள் ஏரி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மிதவை ஒன்றின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.அப்போது திடீரென அந்த மிதவை தலைகுப்புறக் கவிழ, Jessica Lawson (12) என்ற மாணவி அந்த மிதவைக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.

மாணவமாணவியரை சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்களின் கவனக்குறைவு தங்கள் மகளுடைய மரணத்துக்குக் காரணம் என Jessica பெற்றோர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட, வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில், Jessica மரணம் குறித்த விடயத்தில், ஆசிரியர்கள் மீது தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், தங்கள் மகளுடைய மரணத்தால் நிலைகுலைந்துபோன பெற்றோர், அவளது இழப்பின் தாக்கத்தால், தாங்கள் தங்கள் வீடு மற்றும் வேலை ஆகியவற்றையும் இழந்து தவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed