வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பம் யாழில் அரியாலை ஏவி வீதியில் இடம் பெற்றுள்ளதோடு இவர் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

அத்தோடு தனஞ்சயன் (வயது -78) என்ற இவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வயோதிபர் கண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையிலும் கடவையை கடக்க முயற்சித்த போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலத்தின் உடற்கூற்றாய்வு பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Von Admin