வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நளைய தினம் ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.

Von Admin