வவுனியாவில் பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று மாலை வவுனியா மாமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்ற வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குளத்து பகுதிக்கு சென்ற சிலர் பெண்ணின் சடலம் இருப்பதை அவதாணித்ததயடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் 49 வயதினையுடைய சந்திரலதா என்பவர் என தெரியவந்துள்ளது.

Von Admin