இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இத்தாலியில் சுகதேகிகளான 34 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது.
தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உள்ளதை உறுதி செய்வதன் மூலம் மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்துள்ளமை தெரியவருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
05 மில்லிமீற்றருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும். அந்த வகையில், “மனித உடலில் பிளாஸ்டிக் நச்சுகளை சந்திப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை“, அவை செல்களை பாதிப்படையச் செய்வதுடன், புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
தாய்ப்பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என இந்தப் பரிசோதனையை நடத்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.