• Sa.. Juni 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணின் மிக மோசமான செயல்!

Okt. 10, 2022

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 777 போதை மாத்திரைகள் மற்றும் 60 கிராம் கஞ்சா ஆகியவற்றை கொண்டு சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.