புத்தளத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் (10-10-2022) அன்று நடந்தது.

புத்தளம், மணக்குண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

பாடசாலையின் மணி அடித்ததையடுத்து வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு ஓடும் வேளையில் மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென கீழே விழுந்த மாணவனுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முதலுதவி அளித்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் 9வது பிள்ளை எனவும், அவர் எவ்வித நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

Von Admin