• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

போதைக்கு அடிமை! மகனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தாயார்

Okt 11, 2022

போதை பொருளுக்கு அடிமையான தனது மகனை தாயார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழில் இடம்பெற்றுள்ளது.

 „எனது பிள்ளை எனக்கு வேண்டாம்“ என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை சுன்னாகம் காவல்துறையினரிடம் குறித்த தாயார் ஒப்படைத்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்ன் போதை பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என காவல்துறையினரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்பைடைத்துள்ளார்.

இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள ஆர்த்திருத்த பாடசாலையில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் உயிர்கொல்லி ஹரோயின் ஹெரோய்ன் பாவனையில் அதிகளவான சிக்குண்ட நிலையில் , அவர்களில் பெரும்பாலானோர் தாமாக சுயவிருப்பில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed