யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று மாலை யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை பகுதியில் (14.11.2022)வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனத்தில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய சகாயதாசன் பாவா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடல் உணவு நிறுவனத்திற்கு சொந்தமான பட்டா வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடியதால், சிலர் வாகனத்தை அங்கிருந்து எடுக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய டிரைவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து பதற்றம் தணிந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin