• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மன்னாரில் விபத்தில் இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழப்பு !

Okt 16, 2022

தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை குழந்தையை மோட்டார் சைக்கிளின் பெற்றொல் தாங்கியில் இருத்தி பயணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பெற்றோல் பாதுகாப்பு மட்டத்தை (ரிசேவ்) இடது கையினால் மாற்ற முற்பட்ட போது தடுமாறி வீதியில் தரித்து நின்ற பட்டா வாகனத்துடன் மோதுண்ட விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் குழந்தை மயக்கமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

சிகிச்சை பயனின்றி குழந்தை நேற்றை தினம் உயிரிழந்தது.

இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed