இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் கீரிமலை, இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin