யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக  பொலிஸாருக்கு  தகவல் கிடைத்துள்ளது.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் காயங்களுடன் காணப்பட்டவரை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்டவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Von Admin