• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நவம்பரில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

Okt. 18, 2022

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபரினால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவர்களின் அடையாளத்தை மீள் சரிபார்ப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed