• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்த ராசிக்காரர்களுக்கு தான் நாளை எதிர்பாராத ராஜயோகம் (21.10.2022)

Okt 20, 2022

மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் வருமாறு.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். 

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு சீரான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நிதிநிலை நடுநிலையுடன் இருக்கும்.நாளை நீங்கள் இறைவனை வழிபடுவது மன அமைதியை தரும்

ரிஷபம்

நாளைய நாள் நீங்கள் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் பொறுமையுடன் செய்ய வேண்டும். அலுவலகத்தில் பணிகளை திட்டமிட்டு கவனமாக செயல் படவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சற்று குறைவாக இருக்கும்.

மிதுனம் 

நாளைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இருக்கும்.

கடகம்

நாளைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. அதனால் நீங்கல் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய பணிகளை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். துணைவியுடம் பேசும்போது வார்த்தைகளை விடாமல் இருப்பது நல்லது. நிதிநிலை குறைவாக இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

சிம்மம் 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மிதமான நாளாக இருக்கிறது. அலுவலகத்தில் உங்களுடைய பணிகளும், பொறுப்புகளும் அதிகரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெற முடியும். மனைவியிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். பண வரவு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. வரவு செலவு இரண்டுமே கலந்து காணப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. பணிகளை செய்யும்போது கடினமாக இருப்பது போல் உணர்வீர்கள். அதனால் திட்டமிட்டு செய்லபட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. நிதிநிலை மிதமாக இருக்கும். அதனால் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கிறது. உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வளர்ச்சி அடைவீர்கள். அதனால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். துணைவியிடம் மகிழ்ச்சிகரமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிகம்

நாளைய நாள் உங்களுக்கு சாதமான நாளாக இருக்கிறது. புதிய முயற்சிகள் எடுத்து அதில் லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல்கள் அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு சிறப்பானதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களாகிய நாளைய நாள் சற்று சீரான நாளாக இருக்கிறது. நீங்கள் செய்யும் பணிகளை கடினமாக நினைக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும். துணைவியிடம் உணர்ச்சி வசப்படமால் அமைதியான முறையில் பேசுவது நல்லது. பண வரவு குறைவானதாக இருக்கும். செலவுகள் சற்று அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் வளர்ச்சி இல்லாதது போல் உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதிநிலை நடுநிலையுடன் காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. குறித்த நேரத்தில் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரித்து சந்தோசமாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. முக்கிய முடிகள் எடுக்க உகந்த நாள். பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் மகிழ்ச்சியான அணுகுமுறையில் பேசுவீர்கள். நிதிநிலை சிறப்பானதாக இருக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed