• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

Okt 20, 2022

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.

இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கும் தங்க விலை

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தங்க விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆக இனி வரவிருக்கும் மாதங்களிலும் டொலரின் மதிப்பு வலுவடைய காரணமாக இருக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

1 மாத சரிவில்  தங்க விலை

வட்டி விகிதம் மீண்டும் 4% மேலாக உயர்த்தப்படலாம் என்று அமெரிக்க மத்திய வங்கியானது சுட்டிக் காட்டியுள்ளது.

ஆக இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் தங்க விலையானது 1 மாத சரிவில் காணப்படுகின்றது.மேலும் வட்டி விகிதமானது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதன் காரணமாக மேலும் தங்க விலையானது மேலும் அழுத்தத்திலேயே இருக்கலாம் என்றும் ஏற்றம் கண்டாலும் பெரியளவில் இருக்காது என ஒரு தரப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

இன்றைய தங்க விலை [20.10.

கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று Rs. 591,037.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,900.00 ரூபாவாக பதிவாகியுள்ளது

24 கரட்1 கிராம் 20,850.00
24 கரட்8 கிராம் (1பவுன் )166,800.00
22 கரட்1 கிராம் 19,120.00
22 கரட்8 கிராம் (1பவுன் )152,900.00
21 கரட்1 கிராம் 18,250.00
21 கரட்8 கிராம் (1பவுன் )145,950.00

நேற்றைய தங்க விலை [19.10.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 601,312.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,650.00 ரூபாவாக பதிவாகியுள்ளது

24 கரட்1 கிராம் 21,220.00
24 கரட்8 கிராம் (1பவுன் )169,700.00
22 கரட்1 கிராம் 19,460.00
22 கரட்8 கிராம் (1பவுன் )155,650.00
21 கரட்1 கிராம் 18,570.00
21 கரட்8 கிராம் (1பவுன் )148,550.00
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed