நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது வெகுவான அதிகரிப்பாகும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடத்தில் 25,067 டெங்கு நோயாளர்கள் பதிவாகினர். 

Von Admin