உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்திற்குள் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மையிலும் சந்தை நிலைமைக்கு ஏற்ப லிட்ரோவின் விலை குறைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பெற்ற கடன்களுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் 7.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மீளச் செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் லிட்ரோ நிறுவனம் 6.5 பில்லியன் ரூபாய்களை செலுத்தியுள்ளது.

இந்தநிலையில் அக்டோபர் மாதத்திற்குள் செலுத்தவேண்டிய 7.5 பில்லியன் ரூபாய்களே, கடந்த வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்

Von Admin