யாழ்.கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடத்தினை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவதுபோல் பாவனை செய்து குறித்த பகுதியில் இந்த கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில் குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Von Admin