தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு : கொற்றாவத்தையில் துயரம் !
வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்
மன்னார் மாவட்டத்தில் அரச தொழில் புரிந்து வரும் நிலையில் இன்றைய தினம் வீட்டில் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்
இச் சம்பவத்தில் சீனித்தம்பி சுதர்சன் வயது 31 என்ற அரச உத்தியோத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்