சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் அடுத்த வாரமளவில் மீண்டும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு தேவையான 500,000 அட்டைகள் ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டியிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Von Admin