• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாளை மேற்குலக நாடுகளில் கோடைகால நேரமாற்றம்

Okt 29, 2022

மேற்குலக நாடுகளில் நாளை அதிகாலையுடன் கோடைகால நேரமாற்றம் முடிவுக்கு வரவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தவேண்டிய நியதியுடன் குளிர்கால நேரம் ஆரம்பிக்கவுள்ளது.

கோடைகால நேரமாற்றம் கடந்த மார்ச்சில் நடைமுறைக்குவந்த நாளில் நீங்கள் இழந்த ஒரு மணிநேரத்தூக்கத்தை நாளை அதிகாலையில் மீண்டும் பெற்று ஒரு மணிநேர தூக்கத்தை மேலதிகமாக அனுபவிக்க முடியும்.

அதிகாரப் பூர்வமாக ஒக்டோபர் 30 ஆம் திகதி அதிகாலையில் பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இந்த நேரமாற்றம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

ஆயினும் கணினிகள் கைத்தொலைபேசிகள் ஆகியன தானியங்கி முறையில் இந்த நேரமாற்றத்தை உள்வாங்கிக்கொள்ளும்.

எனினும் உங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கிச் செலுத்த வேண்டிய வேலை உங்களுக்கு காத்துள்ளது.

கோடைகாலத்தில் சூரிய ஒளியை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த நேரமாற்றம் தற்போது உலகில் சக்திவள நெருக்கடியின் பின்னணியில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான நேர மாற்றத்தை தொடர்ந்தும் பேண வேண்டுமா? என்ற வினா எழுப்பப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நேரமாற்ற நடைமுறையை நீக்கமுனைவது குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed