நேற்று கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2  பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய  நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உலக வல்லரசு நாடுகளின் கடும் எச்சரிப்பை மீறி கிழக்கு கடல் பகுதியில், கண்டம்விட்டு கண்டம் பாயும்   ஏவுகணை சோதனையை  வடகொரியா நடத்தியுள்ளது.தென் கொரியா- அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதற்கு வட கொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக,   தென் கொரிய எல்லை நோக்கி ஏவுகணை சோத்னை நடத்தி வருகிறது,

ஏற்கனவே, 6 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், வட கொரொயா நேற்று  கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள டோங்சோன் என்ற பகுதியில்  ஏவுகணை சோதனை நடத்தியதில்,  இரு ஏவுகணைகளும் குறிப்பிட்ட தூரம் சென்று, கடலில் விழுந்ததாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வரும் நிலையில் அமெரிக்க படையுடன் இணைந்து தென் கொரியாவும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் 31 ஆம் தேதி முதல்,   நவம்பர் 4 ஆம் தேதி வ்ரை  இரு  நாடுகளும் வான் வழி பயிற்ச்சியில் ஈடுபடவுள்ளதாக  தென்  கொரியா அறிவித்துள்ளது.

இதற்கும் வட கொரியா எதிர்வினை ஆற்கும் எனத் தெரிகிறது.  நேற்று நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Von Admin