வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.

அதன் போது வாள் வெட்டுக்கு இருவர் இலக்காகி காயமடைந்துள்ளனர்.

இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இதன்போது ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இவ் வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Von Admin