யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் (01-11-2022) மதியம் கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது

வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார்.

இதில் காயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 68 வயதான எஸ்.விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தினை ஏற்படுத்திய பெண்ணினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin