• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நொச்சிமோட்டையில் விபத்து! உடுப்பிட்டி இளைஞன் உட்பட 3 பேர் பலி!

Nov 5, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முத்துமாரி தனியார் பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு புரண்டுள்ளது.

இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.
16 பேர் காயம் – தீவிர சிகிச்சை பிரிவில் நால்வர்

இதேவேளை குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed