வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் 23 வயதை சேர்ந்த பெண் ஒருவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந் நிலையில் குறித்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு குறித்த பெண் யாழ் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த இராமகிருஷ்ணன் சயாகரி என தெரிய வந்துள்ளது.

அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.