கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டின் நோய் எதிர்ப்பிற்கான தேசிய அறிவுறுத்தல் குழு, குரங்கம்மை தடுப்பூசியை அளிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் எனவும் அதிலும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு இரண்டாவது தவணை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

முதல் தவணை செலுத்தப்பட்ட 28 நாட்களுக்கு பிறகு, இரண்டாவது தவணை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குரங்கம்மை நோயானது, பாதிப்பு இருக்கும் நபர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துள்ளது, கட்டியணைப்பது, மசாஜ் செய்வது, முத்தமிடுவது மற்றும் பாலியல் உறவு போன்றவற்றால் பரவலாம் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.