• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்.

Nov 6, 2022

டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.

இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் விமானம் விழுந்த நிலையில் அங்கு விரைந்த மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed