யாழில் இருச்து சுற்றுலா சென்றுவிட்டு வரும் வழியில் குடும்பஸ்த்தர் ஒருவர் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானமு இன்று அதிகாலை முகமாலை – இத்தாவில் பகுயில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47)வயதையுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரை விபத்து ஏற்பட்டதைத்தொடர்ந்து பலத்த காயங்களுக்குள்ளான நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ்.போதன வைத்திசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin