யாழ். வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.