• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

Nov 8, 2022

கல்கமுவ, குருநாகல் அனுராதபுரம் வீதியில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் இரு சிறுவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed