ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது காலி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்திலுள்ள ‘கிங்கங்கை’ ஆற்றில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கிங்கங்கை ஆற்றில் நீராடச் சென்ற 14 மற்றும் 15 வயதுடைய நான்கு பேரில் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மொரகொட மற்றும் கல்லியை சேர்ந்தவர்கள்.

கிங்கங்கை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் கிங்தொட்டா பகுதியைச் சேர்ந்தவர். தனது வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் மூவருடன் கிங்கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போதே இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு தற்போது காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Von Admin