• Mi.. Nov. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கைக்கு மீண்டும் போக மாட்டோம் – அடம் பிடிக்கும் 303 பேர்

Nov. 9, 2022

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டாம் என கெஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் கைத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வியட்நாமில் உள்ள அகதிகள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.