உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது.இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யப் படைகள் வசம் சென்றுள்ளன.

உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது.

அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கெர்சன் நகரில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

Von Admin