அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. 

அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. 

இருப்பினும், சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

Von Admin