மாலத்தீவு தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலே என்ற பகுதியில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகவும் அவர்கள் 9 பேர் இந்தியர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

மேலும் ஒரு சிலர் தீ காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் இந்தியர்கள் என்றும் குறிப்பாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளதுஇதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு வருவதாகவும் பலியானவர்களுக்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

Von Admin