இலங்கையில் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தோல் நோய் நிபுணர் டாக்டர் நயனி மதரசிங்க இதனை அறிவித்துள்ளார்.

வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதன் காரணமாக நச்சுத்தன்மையுள்ள அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சுத்தன்மை கொண்ட இந்த அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகப்படியான பொருட்களைக் கொண்டு சருமத்தை அதிகமாகக் கழுவுவது நல்ல பாக்டீரியாக்களைக் கொல்லும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Von Admin