ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைபடுதல், தாமதப்படுதல் ஏற்படுகிறது. இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள் மூலம் போக்கி சிறப்பான திருமண வாழ்வு அமைய பெறலாம்.

இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும். வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்குவதற்கான வழிபாடு, பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட வேண்டும்.

முருகன் சந்நிதியில் கொடுக்கபட்ட பிரசாதமான தீருநீறு மற்றும் குங்குமத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்த 90 வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி விடும். திருமணம் சிறப்பாக நடந்து நீண்ட ஆயுளுடன் வாழ்வர். திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும்.

ஒன்பது செம்பருத்தி பூக்கள், ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி, 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை பசுமாட்டு கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின், சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி, பூஜை அறையில் வைக்க வேண்டும்.

மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து மாலையில் யாரும் பார்க்காதவாறு அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம், கண்மாய், ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டு விட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்

Von Admin