அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்தது.

அந்நிலையில் நல்வாழ்வு மையத்தின் 16 இலட்சம் ரூபா நிதி உதவியில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரனும், சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பி.சத்தியகுமார் , அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் பி.குணதீபன் மற்றும் திரு.மதுரமணி இராசையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Von Admin