அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் நடுவானில் பறந்தபோது 2 போர் விமானங்கள் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதி தீப்பிடித்து தீப்பிழம்பாய் தரையில் விழுந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்கா டெக்சாஸில் டல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி விமான கண்காட்சியில் பலரக விமானங்கள் பங்கேற்றன.

இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் விமான கண்காட்சி துவங்கி நடைபெற்று வந்தது. விமான நிலையத்தின் மேல் வானில் விமானங்கள் சாகசங்கள் செய்தபடி பறந்தன.

விமானங்களை சாமர்த்தியமாக செலுத்தி விமானிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி வந்தனர்.

இருவிமானங்கள் ஒரே நேர்க்கோட்டில் சென்றது. விமானங்கள் அருகருகே பறந்து சென்றன. ஒன்றொடொன்று மோதுவது போல் செல்லும் விமானங்கள் இறுதிக்கட்டத்தில் விலகி சென்றன. இது மக்களை பரவசப்படுத்தியது.

இந்நிலையில் விமான கண்காட்சியில் குண்டுவீச்சுக்கு பயன்படுத்தப்படும் போயிங் பி-17 ரக விமானம் பங்கேற்று இருந்தது.

இந்த விமானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கண்காட்சியின்போது இந்த விமானமும், பெல் பி 63 கிங்கோப்ரா ரக சிறிய விமானமும் கண் இமைக்கும் நேரத்தில் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதிக்கொண்டது.

இதையடுத்து அடுத்த வினாடியில் விமானங்கள் தீப்பிடித்து தீப்பிளம்பாக வானில் இருந்து தரையில் விழுந்தன.

இதற்கிடையே போயிங் பி-17 ரக விமானம், சிறிய ரக விமானம் ஒன்றொடொன்று மோதிக்கொண்டதன் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

Von Admin